வள்ளல் பெரியார்!


பெரும் செல்வந்தர் வீட்டில் பிறந்த பெரியார் மிக எளிமையாகவே வாழ்ந்தார்கள்! பொதுவாழ்வில் ஈடுபட்டதும் அவரது ஆடம்பரங்கள் எல்லாம் ஓடி மறைந்தன!

குடும்ப ரீதியாக அவருக்கு வந்து சேர்ந்த சொத்துகள், பொது வாழ்வில் அவருக்கு அளிக்கப்பட்ட அன்பளிப்புகள் அத்தனையையும் பெரியார் தனக்குப் பின் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வைத்துச் செல்லவில்லை.

பொதுத் தொண்டுக்கு அவை பயன்பட வேண்டும் என்கிற கருத்தோடு அறக்கட்டளையை நிறுவிச் சென்றார்கள். அந்த அறக்கட்டளை ஆற்றவேண்டிய பணியையும் நெறிப்படுத்திச் சென்றுள்ளார்கள்.

பெரியார் காலத்திலும் அவர்களுக்கு பிறகு அன்னை மணியம்மையார் காலத்திலும் தொடர்ந்து பொறுப்பேற்றுள்ள மானமிகு கி.வீரமணி அவர்களின் காலத்திலும், அறக்கட்டளையின் சார்பில் தமிழகத்தில் இயங்கி, விரிவாகி நடைபெற்றுவரும் கீழ்க்கண்ட நிறுவனங்களைக் கவனித்தால் தந்தை பெரியாரின் வள்ளல் தன்மை என்ன என்பது விளங்கும்.

                பெரியார் - மணியம்மை குழந்தைகள் காப்பகம், திருச்சி.
                நாகம்மையார் குழந்தைகள் இல்லம், திருச்சி.
                பெரியார் தொடக்கப்பள்ளி, திருச்சி.
                பெரியார் - மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி.
                பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேஷன் பள்ளி, திருச்சி.
                நாகம்மை பெண்கள் ஆசிரியைப் பயிற்சி நிறுவனம், திருச்சி.
                பெரியார் ஆண்கள் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருச்சி.
                பெரியார் நூற்றாண்டு நினைவு மழலையர் பள்ளி, திருச்சி.
                சாமி கைவல்யம் முதியோர் இல்லம், திருச்சி.
                சுயமரியாதைத் திருமண நிலையம், சென்னை.
                பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டு நிறுவனம், சென்னை.
                பெரியார் வாழ்வியல் மய்யம், சென்னை.
                பெரியார் பகுத்தறிவு நூலகம் - ஆய்வகம், சென்னை.
                பெரியார் அருங்காட்சியகம், சென்னை.
                பெரியார் - நகர குடும்பநல மய்யம், சென்னை.
                பெரியார் - மணியம்மை இலவச மருத்துவமனை,
பெரியார் திடல், சென்னை.
                பெரியார் - மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சி.
                பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி, திருச்சி.
                சோதனைக்கூட ஆய்வாளர் (மகளிர்) துறை, திருச்சி.
                பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக், வல்லம், (தஞ்சாவூர்).
                பெரியார் நூற்றாண்டு தொழில்நுட்ப நிறுவனம், வல்லம், (தஞ்சாவூர்).
                உலகிலேயே பெண்களுக்கென தனி பொறியியல் கல்லூரி தஞ்சை வல்லத்தில் உள்ளது.

கடவுளை மற மனிதனை நினை என்றார் பெரியார்!  சொன்னது மட்டுமல்ல - அவற்றைச் செய்தும் காட்டினார் என்பதற்கு அடையாளமே இவை!
பெரியாரே நம் ஒளி! வாழ்க பெரியார்!


- நூல்: தங்கத் தாத்தா வாழ்க்கையிலே

நூல் - பெரியாரின் மனிதநேயம்
 (பெரியார் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள்)

Comments

Popular posts from this blog

திருவள்ளுவர் நன்னெறிக் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்த பிரசங்கத்தின் சாராம்சம்

‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்னும் தலைப்பில் 1939-இல் ‘விடுதலை’யில் வெளியான தலையங்கங்கள்

தமிழர் பண்பாடு