தமிழர் பண்பாடு
நடிப்புக் கலைகள் தமிழ் இசை நடிப்புக் கலைகள் பற்றி, “இனி என்ன செய்ய வேண்டும்?” என்ற தலைப்பில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், சேலம் சென்டிரல் தியேட்டரில் ‘இன்ப இரவு’ என்னும் நாடகத்திலும், சென்னை மாவட்ட நீதிக்கட்சி மாநாட்டிலும், திருச்சி பொதுக்கூட்டத்திலும் பிப்ரவரித் திங்களில் 7, 9, 13, 20 ஆகிய நான்கு நாள்களில் நிகழ்த்திய சொற்பொழிவுகளின் தொகுப்பு: தமிழ் இசைக்குக் கிளர்ச்சி செய்ததானது வீணாகவில்லை. தமிழிசைத் தொழிலாளர்கள் தமிழில் இசை கற்று வருகிறார்கள். பெரும்பாலும் தமிழில் பாடுகிறார்கள். இசையை நுகர்வோரும் தமிழில் இசை வேண்டுமென்று விரும்புகிறார்கள். இனி இந்த உணர்ச்சி குன்றிவிடாது. இசை விருந்தளிக்கும் செல்வவான்களும், நுகர்வோர்களும் தமிழுணர்ச்சி உள்ளவர்களாக இருக்கும்வரை இந்த உணர்ச்சி வலுத்துக்கொண்டே போகும். இனி என்ன செய்யவேண்டும்? “தமிழ் இசை நமது நல்வாழ்வுக்குப் பயன்படும்படிச் செய்ய வேண்டியது நமது கடமை. இன்று இதுவரை தமிழல்லாத வேறு மொழியில் இருந்த இசை (பாட்டுகள்) தமிழில் பாடவேண்டியதாக ஏற்பட்டதற்குக் காரணம் நமக்கு ...