வள்ளல் பெரியார்!
பெரும் செல்வந்தர் வீட்டில் பிறந்த பெரியார் மிக எளிமையாகவே வாழ்ந்தார்கள் ! பொதுவாழ்வில் ஈடுபட்டதும் அவரது ஆடம்பரங்கள் எல்லாம் ஓடி மறைந்தன ! குடும்ப ரீதியாக அவருக்கு வந்து சேர்ந்த சொத்துகள் , பொது வாழ்வில் அவருக்கு அளிக்கப்பட்ட அன்பளிப்புகள் அத்தனையையும் பெரியார் தனக்குப் பின் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வைத்துச் செல்லவில்லை . பொதுத் தொண்டுக்கு அவை பயன்பட வேண்டும் என்கிற கருத்தோடு அறக்கட்டளையை நிறுவிச் சென்றார்கள் . அந்த அறக்கட்டளை ஆற்றவேண்டிய பணியையும் நெறிப்படுத்திச் சென்றுள்ளார்கள் . பெரியார் காலத்திலும் அவர்களுக்கு பிறகு அன்னை மணியம்மையார் காலத்திலும் தொடர்ந்து பொறுப்பேற்றுள்ள மானமிகு கி . வீரமணி அவர்களின் காலத்திலும் , அறக்கட்டளையின் சார்பில் தமிழகத்தில் இயங்கி , விரிவாகி நடைபெற்றுவரும் கீழ்க்கண்ட நிறுவனங்களைக் கவனித்தால் தந்தை பெரியாரின் வள்ளல் தன்மை என்ன என்பது விளங்கும் . பெரியார் - மணியம்மை ...